< Back
மாநில செய்திகள்
கேதார்நாத் கோவிலில் ரஜினிகாந்த் வழிபாடு
மாநில செய்திகள்

கேதார்நாத் கோவிலில் ரஜினிகாந்த் வழிபாடு

தினத்தந்தி
|
1 Jun 2024 8:49 AM IST

கூலி படத்திற்கு முன் ஆன்மீக பயணத்தை தொடங்கினார் ரஜினிகாந்த்

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்தவுடன் ஆன்மீக பயணமாக இமய மலைக்கு செல்வது வழக்கம்.தற்பொழுது அவர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் இரு தினங்களுக்கு முன்பு இமயமலை புறப்பட்டு சென்றார். அப்போது "ஆண்டுதோறும் இமயமலைக்கு சென்று வருகிறேன். அதுபோல் இந்த ஆண்டும் செல்கிறேன். இமயமலையில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் பாபா குகைக்கு செல்ல இருக்கிறேன்" என்றார்.தற்போது இமயமலையில் ஆன்மிக பயணத்தை தொடங்கியுள்ள ரஜினிகாந்த், ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு ஆசிரமத்தின் தலைமை சாமியாரை சந்தித்தார். மேலும் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களில் ரஜினிகாந்த வழிப்பட்டார் .

மேலும் செய்திகள்