தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம் - தமிழக அரசு
|சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்
சென்னை,
6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை ஆகஸ்ட் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிலையில்,இத்திட்டத்திற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம். தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த தகவல் அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும். அருகிலுள்ள ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் எண்ணை எடுக்க வேணடும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அந்த பகுதியில் ஆதார் மையம் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.