< Back
மாநில செய்திகள்
கள்ளக்காதல் விவகாரம் - கடிதம் எழுதிவைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்
மாநில செய்திகள்

கள்ளக்காதல் விவகாரம் - கடிதம் எழுதிவைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்

தினத்தந்தி
|
29 Jun 2024 7:47 AM IST

கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பூர்,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). பெயிண்டரான இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயசாந்தி (41). இவர், வண்ணாரப்பேட்டை சிமெண்டரி சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

சரவணன் வெளிநாட்டில் வேலை செய்தபோது, சம்பளத்தை மணலி புதுநகரில் உள்ள தனது தங்கையின் கணவரான மற்றொரு சரவணன் (40) என்பவருக்கு அனுப்பி வைத்தார். அவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். அந்த பணத்தை விஜயசாந்தி வீட்டில் கொடுக்க அடிக்கடி சென்று வந்ததால் இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்த பெயிண்டர் சரவணன், மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மனைவியை கண்டித்ததோடு அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் தன்னுடன் கள்ளக்காதலை தொடரும்படி மெக்கானிக் சரவணனும் விஜயசாந்தியை வற்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால் விரக்தி அடைந்த விஜயசாந்தி நேற்று முன்தினம் வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயசாந்தி உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விஜயசாந்தியின் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது கடிதம் ஒன்று சிக்கியது. அதில் அவர், "என் சாவுக்கு என் கணவர் சரவணன் மற்றும் என்னுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட உறவினரான சரவணன் ஆகியோர்தான் காரணம்" என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், விஜயசாந்தியின் கணவரான பெயிண்டர் சரவணன் மற்றும் அவரது உறவுக்காரரான மெக்கானிக் சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்