6 நாட்களுக்கு ஒரு ரெயில் விபத்து நடந்து கொண்டிருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.
|ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சென்னை,
மைசூருலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
6 நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருக்கிறது.ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே . ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தீர்வுகளை உருவாக்குவது எப்போது? . உயிர்சேதம் இல்லாத பெரும் நிம்மதி இருந்தாலும் , ஒவ்வொரு ரெயில் பயணத்தையும் நிம்மதி இல்லாத பதட்டத்தை நோக்கி தள்ளும் சூழலில் இருந்து மீள ரெயில்வே துறை என்ன தான் செய்யப்போகிறது?. என தெரிவித்துள்ளார்.