< Back
மாநில செய்திகள்
காதலித்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்ட வாலிபர் கைது
மாநில செய்திகள்

காதலித்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்ட வாலிபர் கைது

தினத்தந்தி
|
19 Jun 2024 1:28 AM IST

ஆபாச புகைப்படங்களை பார்த்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார்.

சென்னை,

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் நவீன்ராஜ் (வயது 27). இவர், இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த இளம்பெண் சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தார். மயிலாப்பூர் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் அந்த இளம்பெண் தங்கி இருந்தார். இதை தெரிந்து கொண்ட நவீன்ராஜ் சென்னைக்கு வந்தார். அவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை தேடி கொண்டார். தினமும் தான் காதலித்த இளம்பெண் தங்கி இருந்த விடுதி முன்பு அவரது கண் அசைவுக்காக காத்திருந்த நவீன்ராஜுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதனால் வெறுப்படைந்த நவீன்ராஜ்தான் ஒரு தலையாக காதலித்த இளம்பெண்ணை பழி வாங்க நினைத்தார். அவர், அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தையும், அவரது சகோதரியின் புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் இருந்து எடுத்து அதனை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிட்டு தனது கோபத்தை தீர்த்துக் கொண்டார்.

ஆபாச புகைப்படங்களை பார்த்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் நவீன்ராஜை கைது செய்தனர். ஆபாசமாக படங்களை சித்தரிக்க உதவிய அவரது நண்பர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த ருத்திர மணிகண்டன் (29) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்