< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற பயணி: ரெயிலுக்கு இடையே சிக்கி கொண்டதால் பரபரப்பு
|27 Aug 2024 9:06 AM IST
திருச்சியில் ரெயில் புறப்பட்ட போது ஏற முயன்ற பயணி தடுமாறி கீழே விழுந்து ரெயிலுக்கு இடையே சிக்கிக் கொண்டார்.
திருச்சி,
திருச்சி சந்திப்பு ரெயில் நிலையத்தில், ரெயில் நிற்பதற்கு முன்பாக இறங்கிய ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரான ஜெயச்சந்திரன் என்பவர் ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கினார்.
இதனைக்கண்ட ரெயில்வே போலீசாரும், பொதுமக்களும் காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட ரெயில்வே ஊழியர், தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.