< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழக அமைச்சரவையில் மாற்றமா? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
|22 Aug 2024 1:33 PM IST
அமைச்சரவையை மாற்றியமைக்கும் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின.
சென்னை,
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந் தேதி அமெரிக்கா புறப்படுகிறார். அதற்கு முன்னதாக அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றியமைக்க உள்ளதாகவும் மூத்த அமைச்சர் உள்பட சிலரது பதவி பறிக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதை உறுதியாக்கும் விதமாக அமைச்சரவையை மாற்றியமைக்கும் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் தரம் உயர்த்தப்பட்ட அவசரகால செயல்பாட்டு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா? என செய்தியாளர் கேள்வியெழுப்பினார். அமைச்சரவையில் மாற்றம் குறித்து "எனக்கே தகவல் வரவில்லை" என முதல்-அமைச்சர் பதில் அளித்தார்.