< Back
மாநில செய்திகள்
சாலை விபத்தில் 9 பேர் படுகாயம் - ஒருவருக்கு இரு கால்களும் முறிந்த சோகம்
மாநில செய்திகள்

சாலை விபத்தில் 9 பேர் படுகாயம் - ஒருவருக்கு இரு கால்களும் முறிந்த சோகம்

தினத்தந்தி
|
11 Sept 2024 10:28 AM IST

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் இன்று(புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர். தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இமானுவேல் சேகரனின் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக நாமக்கல்லில் இருந்து பரமக்குடிக்கு காரில் 9 பேர் வந்து கொண்டிருந்தனர். பரமக்குடி அருகே கார் வந்துகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் படையப்பா என்பவரின் 2 கால்களும் முறிந்தன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படையப்பாவின் ஒரு கால் அகற்றப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்