< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
78-வது சுதந்திர தினம் - தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து
|15 Aug 2024 8:48 AM IST
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து, சமூக நல்லிணக்கத்தோடும் வேற்றுமையில் ஒற்றுமையோடும், நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வீரர்களையும், தியாகிகளையும் நினைவுகூர்ந்து எந்நாளும் போற்றுவோம்!
எண்ணற்ற உயிர்களைத் தியாகம் செய்து போராடிப் பெற்ற இந்த விடுதலையைக் கொண்டாடி மகிழ்வோம்! நாட்டின் வளர்ச்சிக்காக என்றென்றும் பாடுபடுவோம்! அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.