< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேருக்கு விடுதலை: 3 பேருக்கு சிறை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு
|8 Aug 2024 12:23 PM IST
புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேரை இலங்கை நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த ஜூலை 11-ம் தேதி புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்தும், 2 பேருக்கு ஓராண்டு சிறையும், மேலும் ஒரு மீனவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி 4 பேர் சென்ற படகின் உரிமையாளருக்கும், ஓட்டுநருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 5 மீனவர்கள் சென்ற படகின் உரிமையாளரும், ஓட்டுநரும் ஒரே நபர் என்பதால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.