< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் 42 பேர் உயிரிழப்பு
|10 Oct 2024 8:20 PM IST
விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் 42 பேர் உயிரிழந்துள்ளதாக தொழிலக பாதுகாப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்,
விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் 42 பேர் உயிரிழந்துள்ளதாக தொழிலக பாதுகாப்பு இயக்குநர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2023-ம் ஆண்டு தமிழகத்தில் 27 பட்டாசு விபத்துகள் நடந்தன. அதில் விருதுநகர் மாவட்டத்தில் 15 விபத்துக்கள் நிகழ்ந்தன. நடப்பு ஆண்டில் பட்டாசு ஆலைகளில் 17 விபத்துகள் நடைபெற்றுள்ளன. நடப்பு ஆண்டு பட்டாசு விபத்துகளில் 52 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 42 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்" என தெரிவித்தார்.