கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் 4 போ் கைது
|கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 58 போ் பலியான சம்பவத்தில் மேலும் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் விஷ சாராயம் குடித்ததில் 58 போ் உயிாிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும் இந்த சம்பவம் தொடா்பாக ஏற்கனவே கருணாபுரத்தை சோ்ந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், இவருடைய மனைவி விஜயா, சகோதரா் தாமோதரன் ஆகிய 3 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசாா் கைது செய்து விசாரணை நடத்தினா்.
மேலும் மெத்தனால் கலந்த சாராயம் விற்றதாக சின்னதுரை, ஜோசப்ராஜ், ஷாகுல் அமீது, கண்ணன், ராமா் ஆகிய 5 பேரை போலீசாா் கைது செய்து விசாாித்தனா். அதில் புதுச்சோி மடுகரையை சோ்ந்த மாதேஷ், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இருந்து மெத்தனால் வாங்கி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்ததும், பண்ருட்டியை சோ்ந்த சக்திவேல் என்பவரது கடையின் ஜி.எஸ்.டி. பில் மூலம் பல்வேறு பகுதிகளை சோ்ந்த வியாபாாிகளுக்கு பணம் அனுப்பியதும் தொியவந்தது.
இதையடுத்து இச்சம்பவத்தின் முக்கிய புள்ளியான மாதேஷ் மற்றும் மெத்தனால் அனுப்பி வைத்த சென்னை மதுரவாயலை சோ்ந்த சிவக்குமாா், சக்திவேல் ஆகியோரை நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசர் கைது செய்து விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில் சாராய விற்பனையில் தொடா்புடையதாக சூளாங்குறிச்சி பகுதியை சோ்ந்த கதிரவன் (வயது 30), கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சோ்ந்த தெய்வீகன் (35), தியாகதுருகம் பகுதியை சோ்ந்த அய்யாசாமி (30), மற்றும் அரிமுத்து (30) ஆகிய 4 பேரை நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாா் கைது செய்தனா். இவா்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தனித்தனி இடங்களில் வைத்து ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையே சென்னையை சேர்ந்த சிவக்குமார், சென்னை மாதவரம், பூங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் ஆலையில் இருந்து மெத்தனாலை வாங்கி விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் விற்பனை செய்துள்ளதாக போலீசாாிடம் தொிவித்துள்ளாா். அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனங்களை சோ்ந்த 5 ஆலை உாிமையாளா்கள் உள்பட 7 பேரை பிடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.