
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை: பார் கவுன்சில் உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடைவிதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் 4 வழக்கறிஞர்கள் உள்பட 27 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
அதில், திருவேங்கடம் என்பவர் போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. ஹரிஹரன், அசுவத்தாமன், சிவா மற்றும் ஹரிதரன் ஆகிய 4 பேர் இந்த வழக்கு முடியும் வரை வழக்கறிஞராக தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.