< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து 4 மாணவிகள் மாயம்
|10 Sept 2024 11:56 PM IST
4 மாணவிகளும் பள்ளியில் இருந்து செல்லும் வீடியோவை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து 4 மாணவிகள் மாயமாகி உள்ளனர்.
4 மாணவிகளும் பள்ளியில் இருந்து செல்லும் வீடியோவை வைத்து பேருந்து நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4 மாணவிகளின் புகைப்படங்களும் அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு, அவர்களை கண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் உள்பட 4 மாவட்டம் மற்றும் புதுச்சேரியிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மாணவிகள் விரைவில் பத்திரமாக மீட்கப்படுவர் என்று அவர்களின் பெற்றோரிடமும், ஆசிரியர்களிடமும் போலீசார் உறுதியளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.