< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்
|4 Oct 2024 8:29 AM IST
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை,
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக அடுத்த மாதம் (நவம்பர்) 09, 10, 23, 24 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்த அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.
சிறப்பு முகாமுக்கு தேவையான வாக்காளர் படிவங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 01, 2025 அன்று 18 வயதைப் பூர்த்தி செய்பவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.