3 புதிய குற்றவியல் சட்டம்: நாகையில் 3-வது நாளாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
|3 புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாகையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை,
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட காலனியாதிக்க காலத்து சட்டங்களான இந்திய தண்டனைச்சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச்சட்டம் (சி.ஆா்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐ.இ.சி.) ஆகிய சட்டங்களுக்கு பதிலாக, பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த சட்டங்கள் நாடுமுழுவதும் அமலுக்கு வந்ததையடுத்து, இந்த 3 சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி 3 புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், அதன் புரியாத சமஸ்கிருத தலைப்புத் திணிப்பை எதிர்த்தும் நாகையில் இன்று 3-வது நாளாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டையில் கருப்புப் பட்டை உடன் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.