< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தஞ்சை அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
|25 Aug 2024 3:33 PM IST
ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றனர்.
தஞ்சை,
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (15), பிரவீன் (14) ஆகிய இருவரும் நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது இருவரும் ஆழமான பகுதிக்கு சென்ற போது நீரில் மூழ்கினர். ஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள் அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய இரண்டு சிறுவர்களின் உடல்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவையாறு காவிரியாற்றில் மூழ்கி, 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.