< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில்  ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தினத்தந்தி
|
4 Aug 2024 1:34 PM IST

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி ஆக உள்ள தினகரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி-ஆக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு;

▪️ ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ்குமார் மீனா, நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம்

▪️ மகேஸ்குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம்

▪️ சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம்

▪️ மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம்

▪️ ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி, நெல்லை சரக டிஐஜியாக நியமனம்

▪️ மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் நியமனம்

▪️ மேற்கு மண்டல ஐஜியாக இருந்த புவனிசுவாய், காவல் தலைமையிட ஐஜியாக நியமனம்.

மேலும் செய்திகள்