பிளஸ்-2 விற்கு பின் என்ன படிக்கலாம்... வேலைவாய்ப்பு வழங்கும் படிப்புகள் எவை?
|இது ஒரு போட்டி உலகம். இங்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் உருவாகின்றன.
அந்த காலத்தில் பி.காம் முடித்தவர்களை விரும்பி அழைத்து ,வங்கிப் பணியில் சேர்த்துக் கொண்டார்கள். ஆனால், இப்போது பொறியியல் படிப்பு முடித்தவர்களும், கம்ப்யூட்டர் படிப்பை முடித்தவர்களும் போட்டி போட்டுக் கொண்டு வங்கிப் பணியைத் தேடுகிறார்கள்.
பொறியியல் படிப்புக்கும், வங்கி பணிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? என்று சிந்தித்துப் பார்த்தால், ஒரு உண்மை நமக்கு புலப்படும் .அதாவது, எந்தப் படிப்பை படித்தாலும், ஆர்வத்துடன் படித்து, ஒரே குறிக்கோளோடு கவனம் சிதறாமல் அதிக மதிப்பெண்கள் பெற்று, தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டவர்களுக்கு எல்லா இடத்திலும் வேலை காத்திருக்கிறது.
படிப்புகளாய் மாறும் பயிற்சிகள்
இது ஒரு போட்டி உலகம். இங்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் தானாக உருவாகின்றன .அந்தக் காலத்தில் பி. ஏ, பி ,எஸ். சி, பி .காம் போன்ற படிப்புகள் மட்டுமே பிரபலமாக பேசப்பட்டது. ஆனால், இன்று எத்தனையோ செய்முறை பயிற்சிகளை பாடங்களாக மாற்றி படிப்புகளை உருவாக்கி விட்டார்கள்.
வேலைவாய்ப்பை உருவாக்கும் பல பயிற்சிகள் இன்று பாடங்களாக மாறிவிட்டது. யாராலும் அடையாளம் காணப்படாமல் இருந்த ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம், இன்று வேலை வழங்கும் ஒரு படிப்பாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பொழுதுபோக்காக வைத்திருந்த மாடலிங், இன்று ஒரு சிறப்பு வாய்ந்த படிப்பாகவும் தொழிலாகவும் மாறிவிட்டது.
அதுமட்டுமல்லாமல், மண்பாண்டம் தயாரித்தல்,உணவு தயாரித்தல், செராமிக்ஸ், உள் அலங்காரம் ,உள் வடிவமைப்பு போன்ற தொழில்கள் எல்லாம் இன்று குறுகிய கால டிப்ளமோ படிப்புகளாக மாறிவிட்டன.
மேலும், இதழியல் கலை, மக்கள் தகவல் தொடர்பு, விளம்பரக் கலை, புகைப்படக்கலை, திரைப்பட கேமரா இயக்குதல் மற்றும் வீடியோ எடிட்டிங் போன்றவைகள் எல்லாம் இன்று வேலை தரும் படிப்புகளாக மாறி, வேலை வழங்கும் விதத்தில் இளைய உள்ளங்கள் முன்னால் அணிவகுகின்றன .
நுண் உயிரியல், மீன்வளம், வேளாண்மை, செவிலியர் பணி, ஆய்வு கூட தொழில்நுட்பம் ,ரப்பர் தொழில்நுட்பம், பிளாஸ்டிக் தொழில்நுட்பம் ,சுற்றுப்புற பொருளாதாரம் போன்ற துறைகளில் பல்வேறு படிப்புகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. வியாபாரத்தையும் வணிகத் தொழில் நிறுவனங்களையும் மேம்படுத்தும் வகையில் இன்று ஏராளமான மேலாண்மை படிப்புகளும் உள்ளன .
அதுமட்டுமல்லாமல், ஹோட்டல் தொழிலில் புதிய ஏராளமான ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளும் உருவாக்கப்பட்டு விட்டன. போக்குவரத்து மற்றும் சுற்றுலா பற்றியும் ஏராளமான படிப்புகள் நடத்தப்படுகின்றன.
கம்ப்யூட்டர் துறையில் விதவிதமான படிப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது தவிர, வரலாறு ,புவியியல், அரசியல் அறிவியல், தத்துவவியல் ,உளவியல், பொருளியல், மொழிகள், இசை போன்ற துறைகளில் உள்ள படிப்புகளை படித்தவர்களுக்கு இன்று அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உள்ளன. கலைத்துறையில் உள்ள படிப்புகளை விரும்பும் மாணவ மாணவிகள், புத்தாக்க சிந்தனை கொண்டவர்களாகவும், தாங்கள் படிக்கும் படிப்பின் மீது அதிக ஆர்வம் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான், தேர்ந்தெடுத்த பாடத்தில் அவர்கள் ஆழ்ந்த அறிவைப் பெற முடியும்.
படிப்புகள் பலவிதம்
இனி, பல்வேறு துறைகளில் உள்ள வெவ்வேறு வேலை வழங்கும் படிப்புகளை படிப்புகளையும் பயிற்சிகளையும் பார்ப்போம்.
I.அறிவியல் (SCIENCE)துறைகள் .
1.கடல் சார் அறிவியல் (AQUA SCIENCE )
2.வேளாண்மை (AGRICULTURE)
3.வானவியல் (ASTRONOMY)
4.நுண் வேதியியல் (BIO CHEMISTRY)
5.சுற்றுப்புற அறிவியல் (ENVIRONMENTAL SCIENCE)
6.தடய அறிவியல் ( FORENSIC SCIENCE )
7.உணவு தொழில்நுட்பம் ( FOOD TECHNOLOGY)
8.மண்ணியல் (GEOLOGY)
9.தோட்டவியல் (HORTICULTURE)
10.மனவியல் ( HOME SCIENCE)
11.மீட்டராலஜி ( METEOROLOGY)
12.மாலிக்குலர் பயாலஜி (MOLECULAR BIOLOGY)
13.கடல் இயல் (OCEANOGRAPHY)
14.பிளான்ட் பாதாலஜி ( PLANT PATHOLOGY)
15.பிளாஸ்டிக் சயின்ஸ் ( PLASTIC SCIENCE)
16.பிசிகல் சைன்ஸ் (PHYSICAL SCIENCE)
17.போட்டோ நிக்ஸ் (PHOTONICS)
II. பொறியியல் ( ENGINEERING) துறைகள்
பொறியியல் துறையில் உள்ள சில முக்கியமான படிப்புகள்;
1.கட்டடவியல் ( ARCHITECURE)
2.உயிரி மருத்துவ பொறியியல் ( BIO MEDICAL ENGINEERING )
3.உயிரி தொழில்நுட்பம் ( BIO TECHNOLOGY)
4.செராமிக் பொறியியல் ( CERAMIC ENGINEERING)
5.வேதியியல் பொறியியல் ( CHEMICAL ENGINEERING
6.சுற்றுச்சூழல் பொறியியல் ( ENVIRONMENTAL ENGINEERING )
7.மின் பொறியியல் ( ELECTRICAL ENGINEERING)
8.ஜெனிடிக் பொறியியல் ( GENETIC ENGINEERING )
9.கடல்சார் பொறியியல் ( MARINE ENGINEERING )
10.ரப்பர் தொழில்நுட்பம் ( RUBBER TECHNOLOGY)
11.வான் தொழில்நுட்பம் (SPACE TECHNOLOGY )
12.நெசவு தொழில்நுட்பம் ( TEXTILE TECHNOLOGY )
13.வானூர்தி பொறியியல் ( AERONAUTICAL ENGINEERING)
III. மருத்துவத் (MEDICAL) துறைகள்
1.ஆயுர்வேதம் ( AYURVEDA)
2.எலக்ட்ரோபதி ( ELECTROPATHY)
3.இயற்கை மருத்துவம் ( NATUROPATHY )
4.நியூட்ரிசன் மற்றும் டயாடிக்ஸ் (NUTRITION AND DIETICS)
5.ஆக்குபேஷனல் தெரபி ( OCCUPATONAL THERAPHY)
6.பிசியோதெரபி ( PHYSIOTHEAPHY)
7.ரேடியோ தெரபி ( RADIOTHERAPHY )
8.கால்நடை அறிவியல் ( VETERINARY SCIENCE )
9.பல் மருத்துவம் ( DENTISTRY )
10.ஹோமியோபதி (HONOEOPAYHY)
11.நர்சிங் (NURSING )
12.கண் மருத்துவம் ( OPTOMETRY )
13.பார்மசி ( PHARMACY )
14.உளவியல் ( PSYCHIATRY)
15.ஸ்பீச் அண்ட் ஹியரிங் ( SPEECH AND HEARING )
IV. மேலாண்மை ( MANAGEMENT)துறைகள்
1.வணிக மேலாண்மை ( BUSINESS MANAGEMENT )
2.நிகழ்ச்சி மேலாண்மை ( EVENT MANAGEMENT)
3.வெளிநாட்டு வணிக மேலாண்மை (FOREIGN TRADE MANAGEMENT )
4.ஹோட்டல் மேலாண்மை ( HOTEL MANAGEMENT)
5.மருத்துவமனை மேலாண்மை ( HOSPITAL MANAGEMENT )
6.புதிய அலுவலக மேலாண்மை ( MODERN OFFICE MANAGEMENT )
7.பணியாளர் மேலாண்மை ( PERSONNEL MANAGEMENT)
8.பொதுமக்கள் மேலாண்மை ( PUBLIC MANAGEMENT )
9.சில்லறை வணிக மேலாண்மை ( RETAIL MANAGEMENT)
10.கிராம மேலாண்மை ( RURAL MANAGEMENT)
11.விற்பனை மற்றும் சந்தையியல் மேலாண்மை ( SALES AND MARKETING MANAGEMENT)
12.தேநீர் மேலாண்மை ( TEA MANAGEMENT )
V. கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்ப ( COMPUTER AND IFORMATION TECHNOLOGY )துறைகள்
1.கால் சென்டர் ( CALL CENTRE )
2.கம்ப்யூட்டர் எயிடட் டிசைன் ( COMPUTER AIDED DESIGN )
3.கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ( COMPUTER ENGINEERING )
4.சாப்ட்வேர் இன்ஜினியரிங் ( SOFTWRE ENGINEERING )
5.ஹார்ட்வேர் இன்ஜினியரிங் ( HARDWARE ENGINEERING )
போன்ற துறைகளில் வெவ்வேறு படிப்புகள் உள்ளன.
VI. மக்கள் தொடர்பு ( MASS COMMUNICATION )துறைகள்
1.விளம்பரம் ( ADVERTISING )
2.பட தயாரிப்பு ( FILM MAKING )
3.இதழியல் ( JOURNALISM )
4.புத்தக வெளியீடு மற்றும் அச்சுக்கலை ( P UBLISHING AND PRINTING )
5.ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர் ( RADIO JOCKEY )
6.வீடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர் ( VIDEO JOCKEY )
VII. பாதுகாப்பு (DEFENCE FORCES)துறைகள்
1.ஏர்லைன்ஸ் ஆபரேஷன்ஸ் ( AIRLINES OPERATIONS )
2.கடலோரக்காவல் ( COST GUARD )
3.இந்திய விமானப்படை ( INDIAN AIR FORCE )
4.இந்திய ராணுவ படை( INDIAN ARMY )
5.இந்திய கடற்படை ( INDIAN NAVY)
6.ராணுவம் சார்ந்த பணிகள் ( PARA MILITARY SERVICES )
இந்த துறைகளில் பல படிப்புகள் உள்ளன.
VIII. கலைத்துறைகள்( HUMANITIES )
1.ஆந்திரபாலாஜி ( ANTHROPOLOGY)
2.தொல்பொருள் ஆய்வு ( ARCHAEOLOGY )
3.காலணி தொழில்நுட்பம் ( FOOTWEAR TECHNOLOGY )
4.நுண்கலைகள் ( FINE ARTS )
5.புவியியல் ( GEOGRAPHY )
6.சட்டம் ( LAW)
7.நூலக அறிவியல் ( LIBRARY SCIENCE )
8.உளவியல் ( PSYCHOLOGY )
9.சமூகவியல் ( SOCIOLOGY )
10.சமூகப்பணி ( SOCIAL WORK )
11.ஆசிரியர் பணி ( TEACHING )
போன்ற துறைகளில் படிப்புகள் உள்ளன
IX. வணிகவியல் (COMMERCE ) துறைகள்
1.வேளாண் பொருளாதாரம் ( AGRICULTURE ECONOMICS )
2.கணக்குப்பதிவியல் ( ACCOUNTING )
3.வங்கியியல் ( BANKING )
4.சாட்டர்ட அக்கவுண்டன்சி ( CHARTERED ACCOUNTANCY )
5.நிறுவனச் செயலர் ( COMPANY SECRETARY )
6.பொருளாதாரம் (ECONOMICS )
7.கணிதம் மற்றும் புள்ளியியல் ( MATHEMATICS AND STATISTICS )
8.பங்குச்சந்தை ( STOCK MARKET )
X. தொழிற்கல்வித்துறைகள் ( VOCATIONAL COURSES )
1.அழகுக்கலை (BEAUTICIAN )
2.சிகை அலங்காரம் ( HAIR STYLING )
3.போக்குவரத்து மற்றும் சுற்றுலா ( TRAVEL AND TOURISM )
4.நகை வடிவமைப்பு ( JEWLLERY DESIGN )
இயல் இசை நாடகத் துறைகள்( PERFORMING ARTS ).
1.நடித்தல் ( ACTING )
2.நடனம் ( DANCE )
3.இசை ( MUSIC )
இதர துறைகள்
1.ரத்தின கற்கள் ஆய்வு ( GEMMOLOGY )
2.விசுவல் மெர்ச்சண்டைசி
3.காப்பீடு ( INSURANCE )
4.வானூர்தி ஓட்டும் கலை ( AVIATION )
5.பால்பண்ணை ( DAIRY FARMING )
6.மெர்சன்ட் நேவி (MERCHANT NAVY )
7.புலனாய்வு பணிகள் ( DETECTIVE SERVICES )
-போன்ற துறைகளில் பல்வேறு வேலை வழங்கும் படிப்புகள் உள்ளன.