< Back
சிறப்புக் கட்டுரைகள்
பிளாஷ்பேக் 2023- ஆப்பிள் டூ ஆண்ட்ராய்டு.. வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த அசத்தல் அப்டேட்கள் என்ன?
சிறப்புக் கட்டுரைகள்

பிளாஷ்பேக் 2023- ஆப்பிள் டூ ஆண்ட்ராய்டு.. வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த அசத்தல் அப்டேட்கள் என்ன?

தினத்தந்தி
|
23 Dec 2023 8:07 PM IST

வழக்கம் போலவே டெக் துறையில் இந்த ஆண்டும் சற்றும் சளைக்காமல் அப்டேட்களை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு நிறுவனங்கள் பயனாளர்களுக்கு அள்ளி தெளித்தன. அந்த வகையில் 2023- ஆம் ஆண்டு வெளியான அப்டேட்களை ரீவைண்ட் ஆக பார்ப்போம்.

ற்போதைய கால கட்டத்தில் மொபைல் என்பது அத்தியாவசியம் ஆகிவிட்டது. அறிமுகம் ஆன புதிதில் பேசுவதற்காக மட்டும் பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் தற்போது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டது. ஸ்மார்ட் போன்கள் வருகைக்கு பிறகு டிக்கெட் புக்கிங் செய்வது முதல் உணவு டெலிவரி வரை என அனைத்து சேவைகளையும் செல்போன்கள் மூலமே பெற்று விடலாம். சந்தையில் செல்போன் உற்பத்தி நிறுவனங்களும் அதிகரித்து விட்ட நிலையில், வாடிக்கையாளர்களை தக்க வைக்க ஒவ்வொரு செல்போன் நிறுவனங்களும் போட்டோ போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் புதுப்புது அப்டேட்கள் ஆண்டுதோறும் வெளியாகி வருகிறது.

பொதுவாக சந்தைக்குப் புதிதாக வரும் மொபைல்கள் மீது இயல்பாகவே கவனம் அதிகமாக இருக்கும். அதிலும் ஆப்பிள் வெளியிடும் ஐபோன் மீது தான் ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இருக்கும். அதற்கு ஈடாக ஆண்ட்ராய்டு இயங்குதளமும் டஃப் கொடுத்து வருகிறது. 2023-ஐ முடிக்க தயாராக இருக்கும் நாம் இந்த ஆண்டில் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அப்டேட்களை மட்டும் ஒருமுறை திரும்பி பார்க்கலாம்.

ஆப்பிள் கொடுத்த அசத்தல்


மற்ற நிறுவனங்கள் ஆண்டுக்கு 10, 15 செல்போன்களை ரிலீஸ் செய்தாலும் கூட ஆப்பிள் நிறுவனம் எப்போதும் ஆண்டுக்கு ஒரே ஒரு சீரியஸ் மொபைல்களை மட்டுமே வெளியிடும். அதன்படி இந்தாண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15ஐ வெளியிட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த Wonderlust நிகழ்வில் ஐபோன் 15 வெளியானது. ஆப்பிள் வரலாற்றில் முதல்முறையாக இந்த ஐபோன்களில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் இருப்பது போன்ற டைப் சி சார்ஜர்கள் இருந்தன. வழக்கமாக ஐபோன்களில் சார்ஜ் போடத் தனி பின் இருக்கும். அதாவது அனைத்து வகையான ஆண்ட்ராய்டு மொபைல்களில் டைப் பி, டைப் சி பின்கள் இருந்தாலும் இந்த ஐபோன்களின் சார்ஜர்கள் வேறுபட்டு இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டு டைப் சி யை அறிமுகப்படுத்தி ஆப்பிள் இந்த குறையை போக்கிவிட்டது.


அதுபோக 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி என 4வேரியண்ட்களில் ஐ போன் விற்பனைக்கு வந்தது. இந்த ப்ரோ மாடல் போனில் 6.1 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே இருந்தது. இந்த டிஸ்பிளேவில் ப்ரோ மோஷன் டெக்னாலஜி உடன் 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வந்தது. அதோடு டைனாமிக் ஐலேண்ட், ட்ரூ டோன், வைடு கலர் பி3 மற்றும் ஹாப்டிக் டச் உள்ளிட்ட அம்சங்கள் இந்த போன்களில் இருந்தன. அவுட்டோரில் 2,000 பீக் பிரைட்னஸ் வருகிறது. IP68 தர ஸ்ப்ளாஷ், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் போன் அறிமுகம் ஆனது. மொத்தத்தில் 2023- ஆம் ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு செம ட்ரீட் கொடுத்துவிட்டே சென்றது..

ஆண்ட்ராய்டு;



சாமானிய மக்கள் கையில் பெரும்பாலும் தவழும் செல்போன்கள் கண்டிப்பாக ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டதாகவே இருக்கும். ஆப்பிள் அளவுக்கு இல்லை என்றாலும் அதற்கு சளைக்காமல் தனது பயனர்களுக்கு ஆண்ட்ராய்டும் அப்டேட்களை அள்ளி தெளித்து வருகிறது. 2023-அம் ஆண்டில் முக்கியமாக அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு 13 வெர்ஷன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. அதன்பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன்பாகத்தான் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வெளியாகியுள்ளது. படிப்படியாக இந்த இயங்குதளத்தின் அப்டேட்டை ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் தற்போதுதான் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்த லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் பேட்டரி லைஃப் அதிகரிப்பு,நோட்டிபிகேஷன் ஃப்ளாஷஸ், தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டோ மற்றும் வீடியோ அக்சஸ், மேம்படுத்தப்பட்ட பயனர் பாதுகாப்பு பிராந்திய ரீதியான முன்னுரிமை, ஷேரிங் ஆப்ஷன் மேம்பாடு உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்