< Back
புதுச்சேரி
போக்சோ வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது
புதுச்சேரி

போக்சோ வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது

தினத்தந்தி
|
3 Aug 2023 11:07 PM IST

கிருமாம்பாக்கம் அருகே போக்சோ வழக்கில் தேடப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர்

கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த ஏப்ரல் மாதம் டியூஷன் முடித்து விட்டு பிள்ளையார்குப்பம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது வள்ளுவர்மேடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 23) என்பவர் மாணவியை வழிமறித்து தன்னிடம் பேசுமாறு கூறினார். மேலும் மாணவியை ஆபாசமாக திட்டி திராவகம் வீசி விடுவதாக மிரட்டியுள்ளார். இது தொடர்பாக மாணவியின் தாய் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரகாசை தேடிவந்தனர். இந்த நிலையில் 4 மாதத்திற்கு பின் பிரகாசை போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்