< Back
புதுச்சேரி
வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து; 2 பேர் கைது
புதுச்சேரி

வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து; 2 பேர் கைது

தினத்தந்தி
|
1 Sept 2023 10:25 PM IST

அரியாங்குப்பத்தில் வாலிபரை சரமாரியாக கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பத்தில் வாலிபரை சரமாரியாக கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சரமாரி கத்திக்குத்து

அரியாங்குப்பம் அந்தோணியார் கோவில் வீதியை சேர்ந்தவர் சிம்சோன் (வயது 26). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர், தனது நண்பர்கள் ரகு, இம்பியான், சிவராமன், ராஜேஷ் ஆகியோருடன் அரியாங்குப்பம் அடுத்த காக்காயந்தோப்பு பகுதியில் உள்ள தனியார் மதுக்கடைக்கு மது அருந்த சென்றுள்ளார்.

அப்போது இவர்களுக்கும், அங்கிருந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. தகவல் அறிந்து வந்த அரியாங்குப்பம் போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் சிம்சோன் மீண்டும் மது அருந்த அந்த பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த எதிர் தரப்பினர் சிம்சோனை வழிமறித்து கத்தியாலும், பீர் பாட்டிலாலும் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

2 பேர் கைது

இதுகுறித்த புகாரின்போில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிம்சோனை தாக்கியது வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த பாரதி மோகன் (44), காக்காயந்தோப்பு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (20), தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த வெள்ளை என்ற கோவிந்தசாமி (26), அரியாங்குப்பம் கபூர் நகரை சேர்ந்த மற்றொரு ஆகாஷ் (20) என்பது தெரியவந்தது.

இதில் மோகன், காக்காயந்தோப்பு ஆகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கோவிந்தசாமி உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்