< Back
புதுச்சேரி
இளைஞர் காங்கிரசார் நூதன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி

இளைஞர் காங்கிரசார் நூதன ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
9 July 2023 11:47 PM IST

புதுவையில் விலைவாசி உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரசார் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

புதுவையில் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், அதனை கட்டுப் படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று காலை காமராஜர் சாலை-அண்ணா சாலை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஆனந்தபாபு தலைமை தாங்கினார். மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் துணை சபாநாயகர் பாலன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து வைத்திருந்தனர். மேலும் பாடை கட்டி அதில் காய்கறிகளை அடுக்கி மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது.

ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசிய வாசகங்கள் ஒலிபரப்பப் பட்டது.

மேலும் செய்திகள்