< Back
புதுச்சேரி
40 பவுன் நகை திருட்டு வழக்கில் வாலிபர் கைது
புதுச்சேரி

40 பவுன் நகை திருட்டு வழக்கில் வாலிபர் கைது

தினத்தந்தி
|
12 April 2023 3:39 PM GMT

காரைக்கால் அருகே 40 பவுன் நகை திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கீழகாசாகுடி எம்.எஸ்.பி. லட்சுமி நகரைச்சேர்ந்தவர் சுரேஷ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி.கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரேவதி, தனது 2 குழந்தைகளுடன் கடைவீதிக்கு சென்றுவிட்டு, இரவு 9 மணி அளவில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று ரோந்து பணியின்போது சந்தேகத்தின் பேரில் திருப்பூர் மாவட்டம் எடுவபாலயம் பகுதியைச்சேர்ந்த ஜீவானந்தம் (வயது34) விசாரித்தபோது சுரேஷ் வீட்டில் நகையை சந்திரப்புரத்தைச்சேர்ந்த நண்பர் சம்சுதின் பாபு (32) என்பவரோடு சேர்ந்து கொள்ளையடித்ததையும், சில நாட்கள் கழித்து, திருச்சியில் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக்கி இருவரும் பிரித்துகொண்டதையும் ஒப்புகொண்டார். அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் தங்கக்கட்டிகளை போலீசார் கைப்பற்றினர். தலைமறைவான சம்சுதின்பாபுவை போலீசார் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்