< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
|6 Oct 2023 11:26 PM IST
திருக்கனூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனூர்
திருக்கனூர் அருகே உள்ள சோம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 24). இவர் மண்ணாடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் மதுபான கடையில் ஊழியராக வேலை செய்கிறார். சம்பவத்தன்று இவர் பணிபுரியும் மதுக்கடை அருகில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.