< Back
புதுச்சேரி
பட்டாசு வெடித்த வாலிபர் கைது
புதுச்சேரி

பட்டாசு வெடித்த வாலிபர் கைது

தினத்தந்தி
|
12 Aug 2023 9:30 PM IST

புதுவையில் பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டுச்சேரி

நிரவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையில் போலீசார் மதகடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தாமஸ் அருள் திடலை சேர்ந்த அகஸ்டின் (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்