< Back
புதுச்சேரி
சுகாதாரம், காவல்துறை பணியிடங்களுக்கு  எழுத்துத்தேர்வு
புதுச்சேரி

சுகாதாரம், காவல்துறை பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு

தினத்தந்தி
|
13 Oct 2023 9:06 PM IST

புதுச்சேரி சுகாதாரத்துறை அறுவை சிகிச்சைக்கூட உதவியாளர் பணியிடம், காவல்துறையில் டிரைவர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை 558 பேர் எழுதுகிறார்கள்.

புதுச்சேரி

புதுச்சேரி சுகாதாரத்துறை அறுவை சிகிச்சைக்கூட உதவியாளர் பணியிடம், காவல்துறையில் டிரைவர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை 558 பேர் எழுதுகிறார்கள்.

எழுத்துத்தேர்வு

புதுச்சேரி அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் அறுவை சிகிச்சைக்கூட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடக்கிறது. தேர்வை புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களை சேர்ந்த 485 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

அதேபோல் புதுச்சேரி காவல்துறையில் டிரைவர் நிலை-3 பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நாளை பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடக்கிறது. இந்த தேர்வை 73 பேர் எழுதுகிறார்கள்.

அடையாள அட்டை அசல் கட்டாயம்

விண்ணப்பத்தாரர்கள் தங்களின் நுழைவுசீட்டில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டி கையொப்பமிட்டு எடுத்து வரவேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் நுழைவு சீட்டுடன் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட், வருமான வரி பான்கார்டு இதில் ஏதாவது ஒன்றின் அசல் கட்டாயம் கொண்டு வரவேண்டும்.

அறுவை சிகிச்சைக்கூட உதவியாளர் மற்றும் காவல்துறையில் டிரைவர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நடைபெறும் மையங்கள் தேர்வு தொடங்கும் நேரத்தில் சரியாக மூடப்படும். அதற்கு பின்னர் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்