< Back
புதுச்சேரி
புதுச்சேரி
உலக மக்கள் தொகை தின ஊர்வலம்
|11 July 2023 9:44 PM IST
புதுச்சேரியில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடந்தது.
புதுச்சேரி
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் இன்று புதுச்சேரியில் நடந்தது. சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் அருகே தொடங்கிய இந்த ஊர்வலத்தை சுகாதாரத்துறை துணை இயக்குனர் முரளி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை இயக்குனர்கள் ரகுநாதன், ஆனந்தலட்சுமி, ஜிப்மர் டாக்டர் நிஷாந்த், செவிலிய அதிகாரிகள் சரஸ்வதி, வரலட்சுமி, நாகரத்தினம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தில் செவிலியர் கல்லூரி, என்.எஸ்.எஸ். மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்கள் பெண் கல்வி, பெண்சிசு கொலை தடுப்பு, குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்ப கட்டுப்பாடு, பெண்ணுரிமை குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தியபடி சென்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கடற்கரை காந்தி திடலில் நிறைவடைந்தது. அங்கு அவர்கள் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.