< Back
புதுச்சேரி
ஜிப்மரில் உலக மருந்தாளுனர்கள் தினம்
புதுச்சேரி

ஜிப்மரில் உலக மருந்தாளுனர்கள் தினம்

தினத்தந்தி
|
27 Sept 2023 10:29 PM IST

புதுவை ஜிப்மர் மருந்தக துறையின் சார்பில் உலக மருந்தாளுனர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி

புதுவை ஜிப்மர் மருந்தக துறையின் சார்பில் உலக மருந்தாளுனர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மருந்தாளுனர்கள் ஊர்வலம், மரக்கன்று நடுதல் போன்ற நிகழ்ச்சிகளும் பொதுமக்களுக்கு மருந்துகள் பயன்படுத்துவது குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மருத்துவ கண்காணிப்பாளர் துரைராஜன் தலைமை தாங்கினார். ஜிப்மர் பொறுப்பு இயக்குனர் அப்துல் அமீது முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார்.

சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் மருந்தாளுனர்கள் என்ற தலைப்பில் மருத்துவத்துறை கூடுதல் பேராசிரியர் வெங்கடேசுவரன் உரையாற்றினார். நிகழ்ச்சியில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மருந்தாளுனர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

மருந்தியல் துறை முதுநிலை பேராசிரியர் ரவீந்திரன், மருந்தகத்துறை அதிகாரி ஜெயந்தி, உதவி பொறுப்பு அதிகாரி கேசவன், இணை பேராசிரியர் மிருணாலினி, மருந்தாளுனர்கள் சங்க செயலாளர் சம்பத், தலைவர் ராஜகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்