< Back
புதுச்சேரி
புதுச்சேரி
உலக புகையிலை ஒழிப்பு தினம்
|31 May 2023 11:02 PM IST
பாகூர் போலீஸ் நிலையத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பாகூர்
பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில்உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு முகாம் பாகூர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.முகாமிற்கு இன்ஸ்பெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் டாக்டர்கள் தேவி, சுவாதி ஆகியோர் கலந்துகொண்டு, புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைககள் குறித்து விளக்கினர். இந்த முகாமில் கலந்து கொண்டவா்கள் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதேபோல் அரிமளம் ஊராட்சி ஒன்றியம், நமணசமுத்திரத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது