< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தொழிலாளி தற்கொலை
|10 Nov 2022 10:55 PM IST
மன வருத்தத்தால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர்
வில்லியனூர் கண்ணகிநகர் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 57). வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி விஜயா (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யனார் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதில் இருந்து வேலைக்கு செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த அய்யனார் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
======