< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கார் மோதி தொழிலாளி சாவு
|29 Oct 2022 10:01 PM IST
தவளக்குப்பத்தில் புதுச்சேரி-கடலூர் சாலையில் கார் மோதி தொழிலாளி சாவு
பாகூர்
தவளக்குப்பத்தில் புதுச்சேரி-கடலூர் சாலையில் குப்பை அல்லும் தொழிலாளி ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.