ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு
|அரியாங்குப்பம் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.
அரியாங்குப்பம்
தவளக்குப்பம் அடுத்த அபிஷேகப்பாக்கம், டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 62). விவசாய கூலி தொழிலாளி. சம்பவத்தன்று அபிஷேகப்பாக்கம் ஏரியில் மீன் பிடிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி அம்பிகா மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தனர்.
அப்போது ஏரியில் நாகப்பன் பிணமாக கிடப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த தவளக்குப்பம் போலீசார் ஏரிக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஏரியில் மீன்பிடித்தபோது ஆழமான பகுதியில் இறங்கிய நாகப்பன், நீரில் மூழ்கி இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக அம்பிகா அளித்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.