தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
|மனைவி, மகளை வீட்டில் இருந்து துரத்தி விட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
திருநள்ளாறு
திருநள்ளாறு செருமாவிளங்கை மாதாகோவில் தெருவைச்சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 48). கூலி தொழிலாளி. இவரது மனைவி சந்தானமேரி. இவர்களுக்கு, லிட் லார்ட் ஆப் குயின் (20) என்ற மகளும், சன் சால்ட் கிங் (17) என்ற மகனும் உள்ளனர்.
குடிப்பழக்கம் உள்ள புஷ்பராஜ் நேற்று மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மனைவி சந்தானமேரி, மகள் லிட் லார்ட் ஆப் குயின் ஆகியோருடன் தகராறு செய்து வீட்டை விட்டு புஷ்பராஜ் விரட்டி விட்டதால் சந்தானமேரியும், லிட் லார்ட் ஆப் குயினும் சிவன்கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.
இந்தநிலையில் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த ஜான்பீட்டர் என்பவர் புஷ்பராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார். பலமுறை சத்தம் போட்டும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்து கதவின் துவாரம் வழியே பார்த்தபோது புஷ்பராஜ் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த திருநள்ளாறு போலீசார் புஷ்பராஜின் உடலை கைப்பற்றி, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.