< Back
புதுச்சேரி
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
புதுச்சேரி

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
6 Jun 2023 9:53 PM IST

நெடுங்காட்டில் மது குடிக்கும் பழக்கத்தால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

நெடுங்காடு

காரைக்காலை அடுத்த நெடுங்காடு குரும்பகரம் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 33). கூலி தொழிலாளி. மது குடிக்கும் பழக்கத்தால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துவந்ததால் வருமானம் இன்றி கஷ்டப்பட்டார்.

இந்தநிலையில் அவரது மனைவி மணிபாரதி, குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவேண்டும், மோட்டார் சைக்கிள் கடனை கட்ட வேண்டும் என கணவரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு சரவணக்குமார், தன்னிடம் பணம் இல்லையென கூறிவிட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

அவரை தேடிப்பார்த்ததில் நெடுங்காடு பகுதியில் ஆள் இல்லாத ஒருவீட்டில் சரவணக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது குறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், மது பழக்கத்தால் வேலைக்கு செல்ல முடியாத விரக்தியில் சரவணக்குமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்