< Back
புதுச்சேரி
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
புதுச்சேரி

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
1 Feb 2023 10:33 PM IST

புதுவை கோவிந்தன் தெருவைச் சேர்ந்த தொழிலாளி குடும்ப தகராறு காரணமாக துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மூலக்குளம்

புதுவை முத்திரையர்பாளையம் கோவிந்தன்பேட் அணைக்கரை வீதியை சேர்ந்தவர் காத்தவராயன் (வயது 48). சென்ட்ரிங் தொழிலாளி. இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்தநிலையில் காத்தவராயன் தினமும் மது குடித்து விட்டு, சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் அவருக்கும், மனைவிக்கும் குடும்பத்தில் பிரச்சினை இருந்துவந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்