தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
|குடும்ப பிரச்சினை காரணமாக தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார.
அரியாங்குப்பம்
தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையம் அரவிந்தர் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 49). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. கடந்த 28-ந் தேதி காலை வேலைக்கு சென்ற ரவிச்சந்திரன், அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ரவிச்சந்திரன் தூக்கில் பிணமாக தொங்குவது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தவளக்குப்பம் போலீசார் அங்கு விரைந்து சென்று, ரவிச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக ரவிச்சந்திரன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.