< Back
புதுச்சேரி
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
புதுச்சேரி

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
7 Nov 2022 11:47 PM IST

மது குடித்ததை கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டாா்

மூலக்குளம்

மூலக்குளம் பிச்சைவீரன் பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கம்சலா (வயது 48). இவரது மகன் கதிரவன் (26). கூலித்தொழிலாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதை தாய் கம்சலா கண்டித்தார். இதனால் மனமுடைந்த கதிரவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்