< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
|22 May 2022 10:48 PM IST
திருமணம் ஆகாத விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி
முத்தியால்பேட்டை வாழைக்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 31), கூலித்தொழிலாளி. இவருடன் அவரது தாயார் விஜயா வசித்து வருகிறார். கிருஷ்ணமூர்த்திக்கு இன்னும் திருமணம் ஆகாததால் அவரது தாயார் பெண் பார்த்து வந்தார். ஆனால் வரன் அமையவில்லையாம். இதனால் கிருஷ்ணமூர்த்தி விரக்தியில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.