< Back
புதுச்சேரி
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
புதுச்சேரி

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
26 Oct 2023 9:25 PM IST

குடும்ப பிரச்சினை காரணமாக தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

மூலக்குளம்

புதுவை முத்துப்பிள்ளைபாளையம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 48). தொழிலாளி. இவரது மனைவி உமா. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகப்பன், உமாவுக்கு இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நாகப்பன், கோபாலன்கடை பகுதியில் பாழடைந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்