< Back
புதுச்சேரி
புதுச்சேரி
50 பேருக்கு பணி ஆணை
|14 Oct 2023 10:17 PM IST
புதுவை தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 50 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுவை கொட்டுப்பாளயைம் நவீன சுகாதார மீன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள நகர வாழ்வாதார மையத்தில் தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இந்த முகாம் இன்று பிற்பகல் வரை நடந்தது. இந்த முகாமில் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர். அப்போது 50 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது.
மேலும் வேலைதேடும் இளைஞர்கள் உழவர்கரை நகராட்சி வாழ்வாதார மையத்தில் தங்களது பயோடேட்டா, அடையாள சான்று, முகவரி சான்று, ரேஷன்கார்டு, கல்வி தகுதி சான்றிதழ், வேலை அனுபவ சான்றிதழ் ஆகியவற்றுடன் நேரில் அணுகி பதிவு செய்துகொள்ளலாம். அவர்களுக்கு பின்னர் வேலைவாய்ப்பு பற்றிய செய்திகள் தெரிவிக்கப்படும் என்று உழவர்கரை நகராட்சி தெரிவித்துள்ளது.