< Back
புதுச்சேரி
கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
புதுச்சேரி

கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
17 Sept 2023 11:31 PM IST

நெட்டப்பாக்கம் தொகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நெட்டப்பாக்கம்

புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த பணிகளை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் சூரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அனிதா, டெங்கு தடுப்பு பிரிவு பொறுப்பு அதிகாரி பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்