< Back
புதுச்சேரி
புதுச்சேரி
முகமூடி அணிந்து மகளிர் காங்கிரசார் ஊர்வலம்
|7 Oct 2023 11:55 PM IST
சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமையை கண்டித்தும் புதுவை மகளிர் காங்கிரசார் இன்று ஊர்வலம் நடத்தினா்
புதுச்சேரி
சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், மணிபூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமையை கண்டித்தும் புதுவை மகளிர் காங்கிரசார் இன்று ஊர்வலம் நடத்தினா். புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்திற்கு மகளிர் காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி தலைமை தாங்கினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் அண்ணாசாலை, காமராஜர் சிலை, நேரு வீதி, மிஷன்வீதி வழியாக ஆம்பூர் சாலை சந்திப்பு வரை சென்றது. ஊர்வலத்தில் கலந்துகொண்ட மகளிர் காங்கிரசார் காந்தியின் உருவம் பொறித்த முகமூடியை அணிந்திருந்தனர்.