< Back
புதுச்சேரி
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.32 லட்சத்தை இழந்த பெண்
புதுச்சேரி

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.32 லட்சத்தை இழந்த பெண்

தினத்தந்தி
|
11 Oct 2023 10:56 PM IST

ஆன்லைன் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.32 லட்சத்தை பெண் ஒருவர் இழந்தார். இது குறித்த சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி

ஆன்லைன் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.32 லட்சத்தை பெண் ஒருவர் இழந்தார். இது குறித்த சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரூ.32 லட்சம் முதலீடு

புதுச்சேரி நாவற்குளத்தை சேர்ந்தவர் சந்தானம். இவரது மனைவி லட்சுமி (வயது34). இவர்களது குடும்ப நண்பர் மூலக்குளத்தை சேர்ந்த மணிமாறன். அவரது அறிவுறுத்தலின்பேரில், ஆன்லைன் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் மூதலீடு செய்தால் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகவட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.

அதன்படி, லட்சுமி கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் முதல் பல்வேறு தவணைகளாக ஆன்லைன் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தார். மேலும் அவரின் நண்பர்கள், உறவினர்களிடமும் கடன்பெற்றும், அவர்களின் பெயர்களிலும் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் 146 தவணைகளாக கடந்த ஜனவரி மாதம் வரை ரூ.32 லட்சத்திற்கும் மேலாக முதலீடு செய்துள்ளார்.

சைபர் கிரைமில் வழக்கு

இந்தநிலையில் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்ததால் வட்டி தருவதில் காலதாமதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் பல மாதங்களாக ஆன்லைன் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் கூறியடி அசல் தொகையும், வட்டியும் கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார். புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்