< Back
புதுச்சேரி
பெண் மீது செங்கலால் தாக்குதல்
புதுச்சேரி

பெண் மீது செங்கலால் தாக்குதல்

தினத்தந்தி
|
30 Sept 2023 9:55 PM IST

திருநள்ளாறு அருகே சண்டையை தடுக்க முயன்ற பெண்ணை செங்கலால் தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநள்ளாறு

திருநள்ளாறு சுப்புராயபுரம் பகுதி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமாரி. இவருக்கும், அந்த பகுதியை சேர்ந்த அகல்யா என்பவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டையாக மாறியது. அதே பகுதியை சேர்ந்த ஷீலா என்பவர் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றார்.

அப்போது விஜயகுமாரியின் மகன் தேவா (வயது 27) அகல்யாவை பார்த்து என் அம்மாவிடம் சண்டை போடுகிறாயா? என கேட்டு சாலையில் கிடந்த செங்கலை எடுத்து அகல்யா மீது வீசியுள்ளார். அகல்யா விலகி கொள்ளவே அருகில் நின்ற ஷீலா மீது பட்டது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரின் திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்