< Back
புதுச்சேரி
மனைவி, கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு
புதுச்சேரி

மனைவி, கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு

தினத்தந்தி
|
5 Aug 2023 11:03 PM IST

தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனவைி மற்றும் கள்ளக்காதலன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதுச்சேரி

தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனவைி மற்றும் கள்ளக்காதலன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொழிலாளி கொலை

புதுவை மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுப்பிரமணி (வயது 33) நேற்று தனது வீட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் சுப்பிரமணியின் மனைவி ரஞ்சிதத்துக்கும் (வயது 27) உழவாய்க்கால் அகரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதும், இதை சுப்பிரமணி கண்டித்தார்.

இதுதொடர்பாக ரஞ்சிதம், கள்ளக்காதலன் மாரியப்பனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர்கள் சுப்ரமணியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர்.

அதன்படி இரவில் சுப்ரமணியின் வீட்டிற்கு சென்ற மாரியப்பன் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்த ரஞ்சிதத்தையும், அவரது கள்ளக்காதலன் மாரியப்பனையும் போலீசார் கைது செய்தனர்.

சிறையிலடைப்பு

கைதான இருவரும் இன்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்