< Back
புதுச்சேரி
புதுவையில் பரவலாக மழை
புதுச்சேரி

புதுவையில் பரவலாக மழை

தினத்தந்தி
|
8 July 2023 10:29 PM IST

புதுவையில் பரவலாக மழை பெய்தது.

புதுச்சேரி

புதுவையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 6 மணி அளவில் வானத்தில் கருமேகக் கூட்டங்கள் திரண்டன. பின்னர் சிறிது நேரத்தில் மழை கொட்டியது.

அரை மணி நேரம் பரவலாக பெய்த இந்த மழையால் வேலை, பள்ளி - கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பியவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். மோட்டார் சைக்கிள்களில் சென்றவர் கள் குடை பிடித்தபடி சென்றதை பார்க்க முடிந்தது.

மழை காரணமாக புதுவையில் இன்று இரவு இதமான சூழ்நிலை நிலவியது.

மேலும் செய்திகள்