< Back
புதுச்சேரி
33 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
புதுச்சேரி

33 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

தினத்தந்தி
|
12 July 2023 11:58 PM IST

காரைக்கால் தெற்கு தொகுதியை சேர்ந்த 33 பயனாளிகளுக்கு நாஜிம் எம்.எல்.ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

காரைக்கால்

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் திருமண உதவித்தொகை, கலப்பு திருமண ஊக்குவிப்பு தொகை, பிரதம மந்திரி வீடுகட்டும் திட்ட தவணை தொகை, தொடர் நோய் சிகிச்சை பெறுவதற்கான உதவித்தொகை என 33 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தொகுதி எம்.எல்.ஏ. நாஜிம் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து, காரைக்கால் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு 9-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் மழை அங்கியை நாஜிம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

மேலும் செய்திகள்