< Back
புதுச்சேரி
புதுச்சேரி
20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
|23 July 2023 11:10 PM IST
வில்லியனூர் அருகே 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்.
வில்லியனூர்
புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், நலிவடைந்த தவில் கலைஞர்கள், முடித்திருத்துவோர், சலவை தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மங்கலத்தில் நடந்தது. அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கலந்து கொண்டு 20 பயனாளிகளுக்கு தவில், முடித்திருத்தும் நாற்காலி, இஸ்திரி பெட்டி ஆகியவற்றை வழங்கினார். இதில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.