< Back
புதுச்சேரி
வெல்டர் தூக்குப்போட்டு தற்கொலை
புதுச்சேரி

வெல்டர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
9 Aug 2023 10:26 PM IST

பாகூர் அருகே மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்திய வெல்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாகூர்

பாகூர் பங்களா வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). வெல்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பவித்ரா. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. மணிகண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 20 நாட்களாக மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்தி இருந்தார். இந்தநிலையில் மணிகண்டன் அவரது தாய் பழனியம்மாளிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு பழனியம்மாள் கடைக்கு போய்விட்டு, வந்து தருகிறேன் என்று கூறி சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த மணிகண்டன், வீட்டில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்